வருகைதந்த கப்பலை திருப்பி அனுப்ப யோசனை

லிட்ரோ நிறுவனத்திற்காக இறக்குமதி செய்ய LP எரிவாயுவுடன் கொழும்புக்கு வருகை தந்த சமீபத்திய கப்பல் ஒன்றில், களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு திரவத்தில் ‘எத்தில் மெர்காப்டனின்’ என்ற பதார்த்தம் தேவையான அளவுடன் இணங்கவில்லை என்பதனால் அதனை நிராகரிக்க அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் , இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்க தொழில்நுட்ப குழு இன்று (14/12) கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் இதனை நிராகரித்தால், நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், அதன் காரணமாக எத்தில் மெர்காப்டானை தேவையான அளவு கையிருப்பில் சேர்த்து விநியோகிக்கலாமா என்பது குறித்து நிபுணர்களின் முழுமையான கருத்தை இன்று கூடவுள்ள குழு பெறவுள்ளதாகவும் அறியமுடிகிறது.

வருகைதந்த கப்பலை திருப்பி அனுப்ப யோசனை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version