60 கர்ப்பிணிகள் இதுவரை உயிரிழப்பு

சுமார் 60 கர்ப்பிணித் தாய்மார்களும் 18 வயதுக்குட்பட்ட 89 சிறுவர்களும் இதுவரை கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்திரமலி டி சில்வா தெரிவித்தார்.

நேற்று (13/12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கர்ப்பிணித் தாய்மார்களின் பெரும்பாலான மரணங்கள் அனைத்தும் மூன்றாவது அலையினால் ஏற்பட்டுள்ளது.

எனினும் 95% கர்ப்பிணித் தாய்மார்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுள்ளதால், இறப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அதனால் தொற்று நோய்களும் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

இந்நிலையில் தகுதியுடைய அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் தற்சமயம் நடைபெற்று வரும் மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசியை தாமதிக்காமல் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

60 கர்ப்பிணிகள் இதுவரை உயிரிழப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version