சேவையில் இருந்து விலக தீர்மானம்

இன்று (14/12) முதல் புகையிரத வேகத்தடை உத்தரவுகள் வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, புகையிரதங்களில் தாமதம் ஏற்படலாம் என சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சீர் செய்யாமை, பாவனைக்கு உதவாத புகையிரத பெட்டிகளை போக்குவரத்தில் ஈடுபடுத்தி உயிராபத்து ஏற்படுகின்றமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரி சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

இந்நிலையில் உரிய தீர்வுகள் வழங்கப்படாத பட்சத்தில், அனைத்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளும் தமது சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சேவையில் இருந்து விலக தீர்மானம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version