தொடர்ந்து பதிவாகும் நிலநடுக்கங்கள் – காரணம் என்ன?

மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளில் தொடர்ந்து மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

முதல் நிலநடுக்கம் தஜிகிஸ்தான் நாட்டில் நேற்று (19.02) இரவு 11.24 மணியளவில் ஏற்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, அது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இன்று (20.02) அதிகாலை 1.56 மணியளவில் பாகிஸ்தானில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவும் ரிக்டர் அளவில் 3.6 ஆக பாதிவானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இன்று (20.02) காலை 5.52 மணியளவில் திபெத் பகுதியில் ரிக்டர் அளவில் 3.3 அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த மூன்று நிலநடுக்கங்களினாலும் இதுவரை உயிரிழப்பு அல்லது சொத்துச் சேதம் ஏற்பட்டதாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version