கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்

நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கடவுச்சீட்டை விசா பெறுவதற்காக தற்காலிகமாக விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த இன்று (14/12) இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மனுவொன்றை தாக்கல் செய்த பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சட்டத்தரணிகள், தனது கட்சிக்காரர் பெப்ரவரி மாதம் வெளிநாடு செல்லவுள்ளதாகவும், தற்போது நீதிமன்ற காவலில் உள்ள அவரது கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கமைய இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, குறித்த கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version