சலுகை வழங்கக் கோரி அமைச்சருக்கு கடிதம்

டொலர் தட்டுப்பாடு காரணமாக பாவனைக்கு தேவையான பால் மாவில் 50 சதவீதத்தை மாத்திரமே இறக்குமதி செய்ய முடியும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இறக்குமதிக்கு தேவையான டொலர்களுக்கு சலுகை வழங்குமாறு கோரி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பால்மாவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் எதிர்காலத்தில் நாட்டில் பால்மா தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் பால்மா இறக்குமதியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சலுகை வழங்கக் கோரி அமைச்சருக்கு கடிதம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version