தென் மாகாண புதிய ஆளுநர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடுவை நியமித்துள்ளார்.

அதன்படி, அரசியலமைப்பின் 154 ஆ பிரிவின்படி, 2026 பெப்ரவரி மாதம் 24ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான உப குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சுசிரிபால மானவடு, ருஹுணு பல்கலைக்கழகத்தில் சிங்களக் கல்விப் பிரிவின் தலைவராகவும், ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version