சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்த பின் விசேட பாதுகாப்பு திட்டம்!

க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய கலவரச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி ஆரம்பமான இந்த சாதாரண தரப் பரீட்சை இன்று (26.02) நிறைவடையவுள்ளது. முந்தைய ஆண்டுகளில் பரீட்சை முடிந்த பின் சில மாணவர்களால் ஏற்பட்ட சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி, இத்தகைய அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version