ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சீனா தெரிவித்துள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடனான சந்திப்பின்போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இதனை தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றத்திற்காக ஒரு சுதந்திர நாட்டின் தலைவரை படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சீன வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.