குவைத் கடற்பரப்பிற்கு அருகே எண்ணெய் கப்பலின் அருகில் வெடிப்பு!

குவைத் கடற்கரைக்கு அருகே ஒரு எண்ணெய் கப்பலின் அருகில் பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாக United Kingdom Maritime Trade Operations (UKMTO) தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குவைத்தின் Mubarak Al Kabir பகுதியில் இருந்து தென் கிழக்காக சுமார் 30 கடல் மைல் தூரத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிப்பினால் கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வெடிப்பின் பின்னர் கப்பலில் தீ விபத்து எதுவும் பதிவாகவில்லை என்றும் UKMTO தெரிவித்துள்ளது.

மேலும், கப்பலில் இருந்த குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version