எரிபொருள் விலைகள் விரைவில் குறைவடையும்!

அமெரிக்காவின் ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையின் விளைவாக நீண்ட காலத்தில் எரிபொருள் விலைகள் குறையும் என அமெரிக்க ஜனாதிபதி ஊடக செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளில் ஏற்பட்ட உயர்வு தற்காலிகமானது என்றும், இராணுவ நடவடிக்கையின் பின்னர் நீண்ட அடிப்படையில் விலைகள் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை திறந்திருக்க வேண்டும் என ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்கான கூடுதல் திட்டங்களை அமெரிக்க இராணுவம் தயாரித்து வருவதாகவும் கரோலின் லீவிட் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version