மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய பேருந்துகள் சேவையில்!

‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட நவீன, குறைந்த தரை அமைப்புடைய (low-floor), குளிரூட்டப்பட்ட 10 புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பேருந்திலும் 80 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்பதுடன் சக்கர நாற்காலி பயன்படுத்தும் பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பேருந்துகள் மாகும்புர போக்குவரத்து மையத்திலிருந்து கோட்டை மற்றும் கடவத்த உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. மேலும், முக்கிய மருத்துவமனைகளுடன் இணைக்கும் பாதைகளிலும் இவை இயக்கப்படுகின்றன.

இந்த முன்மாதிரி திட்டம் வெற்றியடைந்தால், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மேலும் 100 பேருந்துகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் பேருந்து நிறுத்தங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version