நோர்வேயின் புதிய சட்டத்திற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

குழந்தைகளை இலக்காகக் கொண்டு ஆரோக்கியமற்ற உணவு மற்றும் பானங்களின் விளம்பரங்களைத் தடைசெய்யும் நோர்வே நாட்டின் புதிய சட்டத்தை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஆதனம், பாராட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை அதிக உடல் எடை, இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் அபாயங்களை குறைக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

நோர்வேயில் உள்ள பாடசாலை மாணவர்களில் 20%க்கும் மேற்பட்டோர் அதிக எடை அல்லது கொழுப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சட்டத்தின் மூலம், நோர்வே, உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்தியத்தில் இந்த பரிந்துரையை அமல்படுத்தும் முதல் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version