இலங்கை – மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் 2026: அட்டவணை வெளியீடு!

இலங்கை அணி 2026 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டு முழுமையான வெள்ளைப் பந்து மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்த சுற்றுப்பயணம் முதலில் 3 ஒருநாள் (ODI) போட்டிகளுடன் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து 3 டி20 (T20) போட்டிகள் நடைபெறும். பின்னர் 2 டெஸ்ட் போட்டிகளுடன் தொடர் நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.

வெள்ளைப் பந்து போட்டிகள் அனைத்தும் Sabina Park மைதானத்தில் நடைபெற உள்ளன. டெஸ்ட் போட்டிகள் Sir Vivian Richards Stadium மைதானத்தில் நடைபெறவுள்ளன.

ஒருநாள் தொடர் ஜூன் 3, 6 மற்றும் 8 ஆம் திகதிகளிலும், டி20 போட்டிகள் ஜூன் 11, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளிலும் நடைபெறவுள்ளன.

மேலும், ஜூன் 18 முதல் 21 வரை Coolidge Cricket மைதானத்தில் ஒரு பயிற்சி போட்டியும் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25 முதல் 29 வரை நடைபெறும். இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 3 முதல் 7 வரை நடைபெறவுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version