மீண்டும் மனிதர்கள் சந்திரனை நோக்கி பயணிக்கும் ஆர்டெமிஸ் II பயணம் ஆரம்பம்!

Artemis II என்ற வரலாற்றுச் சிறப்பு செயற்பாடு நேற்று (01.04) அமெரிக்காவின் Kennedy Space Center இலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

10 நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்தில் 4 பேர் கொண்ட குழு, பூமியிலிருந்து 4 இலட்சம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று சந்திரனை சுற்றி வர உள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்கள் மேற்கொள்ளும் முதல் சந்திரப் பயணமாகும்.

இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், Space Launch System ராக்கெட் மற்றும் Orion spacecraft விண்கலத்தின் செயல்திறனைச் சோதிப்பதாகும்.

அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சந்திர தரையிறக்கப் பயணங்களுக்கு இது முக்கியமான அடித்தளமாக இருக்கும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version