கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் அதிபராக திருமதி. வாசுகி சுதாகர் பதவியேற்பு!

கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் புதிய அதிபராக திருமதி. வாசுகி சுதாகர் (SLEAS 1) அவர்கள் இன்று (20.04) பதவியேற்றுக்கொண்டார்

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த இவர், யாழ்இந்து மகளிர் கல்லூரியில் கல்வியை நிறைவு செய்து, தனது பட்ட படிப்பின் பின்னர் மன்னார் புனித சவேரியார் பாடசாலையில் 12 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி, முகாமைத்துவ கற்கைகள் பின்னர், உதவி கல்வி பணிப்பாளராக 12 ஆண்டுகள் சேவையினை பூர்த்தி செய்திருக்கின்றார்.

வவுனியா கல்வித் திணைக்களத்தில் பல முகாமைத்துவ பதவிகளை வகித்ததன் பின்னர் தற்போது கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரின் முதல் பெண் அதிபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version