வெசாக் வாரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழாவின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மே 27 முதல் ஜூன் 2 வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை புத்தசாசனம், சமய மற்றும் பண்பாட்டு விவகாரங்கள் அமைச்சு, பௌத்த விவகாரங்கள் திணைக்களம், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் பிற அரச, அரசல்லாத நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், நாடு முழுவதும் வெசாக் விழாவை கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, வெசாக் வாரத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய நிகழ்ச்சி நிரல்களை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version