SLC தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழு பதவி விலகல்!

இலங்கை கிரிக்கெட்டின் (SLC) அனைத்து நிர்வாகப் பணிகளையும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று (29.04) முதல் தற்காலிகமாக ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34 ஆம் பிரிவுகளின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கிரிக்கெட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், கட்டமைப்பு மாற்றங்களைச் செய்யவும் விரைவில் ஒரு குழு நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் (SLC) தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழுவின் ராஜினாமாவை விளையாட்டு அமைச்சர் இன்று (29.04) ஏற்றுக்கொண்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version