நீதிமன்றங்களில் 1 மில்லியன் வழக்குகள் நிலுவையில்?

இலங்கையின் நீதிமன்றங்களில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதி அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, ஜூன் 30, 2025 நிலவரப்படி, நாடு தழுவிய ரீதியில் உள்ள 293 நீதிமன்றங்களில் மொத்தம் 1,134,474 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிமன்றங்களில் 260,007 வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் 5,396 வழக்குகளும் தீர்வுக்காகக் காத்திருப்பதுடன், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 5,216 வழக்குகளும், உரிமையியல் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றத்தில் 6,591 வழக்குகளும், வர்த்தக உயர் நீதிமன்றத்தில் 6,330 வழக்குகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. குற்றவியல் உயர் நீதிமன்றத்தில் 27,376 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version