வாகன இறக்குமதி வரிகள் மீது இன்று முதல் கூடுதல் கட்டணம்!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குப் பொருந்தக்கூடிய சுங்க இறக்குமதி வரிகள் மீது 50% கூடுதல் கட்டணம் விதிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, இந்த 50% கூடுதல் கட்டணம் இன்று (16.05) முதல் மூன்று மாத காலத்திற்கு விதிக்கப்பட உள்ளது.

இருப்பினும், மே 15ம் திகதி அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் பெறப்பட்ட வாகனங்களுக்கு இந்த புதிய 50% கூடுதல் கட்டணம் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 50% கூடுதல் கட்டணத்தை ஏப்ரல் 1ம் திகதி முதல் நீக்க நிதி அமைச்சு முன்னர் முடிவு செய்திருந்தபோதிலும், இன்று முதல் அதைச் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version