தெமட்டகொட ருவனின் பெறுமதிமிக்க காணி கண்டுபிடிப்பு

நாட்டின் பிரபல போதைப்பொருள் வியாபாரியான தெமட்டகொடை ருவனுக்குச் சொந்தமான பெறுமதியான காணி ஒன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

தெமட்டகொடை – வேலுவன பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த காணியில் நீச்சல் தடாகம் ஒன்று இருப்பதாகவும், அக்காணியின் பெறுமதி சுமார் 30 மில்லியன் ரூபா எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய காணி தொடர்பான பத்திரம் தெமட்டகொடையில் உள்ள தனியார் வங்கியொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அப்பத்திரம் மீட்கப்பட்டுள்ளது.

தெமட்டகொடை ருவன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தெமட்டகொட ருவனின் பெறுமதிமிக்க காணி கண்டுபிடிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version