மகாவலி கங்கையில் இளைஞரொருவரும் யுவதியொருவரும் குதித்த சம்பவமொன்று நேற்று (16/12) பதிவாகியுள்ளது.
மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்று பாலத்திலிருந்து நேற்று இரு ஜோடிகளும் ஆற்றில் குதித்துள்ளனர்.
எனினும் இளைஞர் ஆற்றை நீந்தி கரையை கடந்துள்ளதாகவும், யுவதியை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன யுவதி 19 வயதுடையவர் என்பதுடன் நேற்று காலை தனியார் வகுப்பிற்கு செல்வதாகக்கூறி வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.