குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் வைத்தியகலாநிதி ஷப்ரி சிஹாப்டீன் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
சுகாதர அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலயிடம் சுகாதர அமைச்சின் செயலாளர் பிழையான செயலை செய்துள்ளதாகவும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
சுகாதர அமைச்சின் செயலாளர் உரிய முறையில் இந்த விடயத்தை கையாளவில்லை என்ற குற்றசாட்டினையும் அவர்கள் முன் வைத்துள்ளனர்.
இந்த விடயங்களுக்குள் சர்ச்சசை காணப்படுவதாகவும், நடைபெற்றுள்ள விடயங்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுகாதர அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றுக்குரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.