பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை

கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடாத்துவதற்கு பிரான்ஸ் நாடு தடை விதித்துள்ளது.

விடுமுறை கொண்டாட்டங்களால் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அந்த நாட்டின் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதுதொடா்பாக பத்திரிகையாளா் சந்திப்பில் பேசிய பிரான்ஸ் பிரதமா் ஜீன் காஸ்டெக்ஸ், “கொரோனா 5 ஆவது அலை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரொன் வகை கொரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது என எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, விடுமுறைக் காலங்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் புத்தாண்டு கலைநிகழ்ச்சிகளை நடாத்துவதற்கும், வாண வேடிக்கை நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version