வவுனியா பம்பைமடு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கல்விக்கு கைகொடுப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கிராமசேவையாளர் சர்வேஸ்வரனின் ஏற்பாட்டில் இந்த குழு ஆரம்பிக்கும் நிகழ்வும், பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று(18.12) இடம்பெற்றது.
வவுனியா கற்பகபுரம் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் குறித்த கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கல்வி குழு இரண்டு குழுக்களாக ஆரம்பிக்கப்பட்டன. நிர்வாக குழு, ஆலோசனை குழு என இரு குழுக்கள் நியமிக்கப்பட்டன.
நிர்வாக குழுவில், கிராம மக்களின் பிரத நிதிகலிருந்து தலைவர் செயலாளர் பொருளாளர், நிர்வாக குழுவினர் தெரிவு செய்யப்பட்டனர்.
ஆலோசனை குழுவில், கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமுர்த்தி உத்தியோகத்தர்
நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய அதிபர், கற்பகப்புறம் பாடசாலை அதிபர், பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிமற்றும் சுயாதின இளைஜர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட கல்வி பேரவையின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் கீழ்வருமாறு முடிவு செய்யப்பட்டுள்ளன.
- மாணவர்கள் பாடசாலை இடைவிலகளை இல்லாமல் செய்தல்.
- கல்விக்கு தடையாக இருக்கின்ற அனைத்து தடைகளையும் தான்றுவதற்கு மாணவர்களுக்கும் பெறோர்களுக்கும் உதவி செய்தல்
- மாணவர்களின் பெறுப்பேற்றினை உயர்த்துதல்
- கிராமபுர பாடசாலை மற்றும் பாலர் பாடசாலை ஆகியவற்றை வளர்ச்சி அடைய செய்தல்
கல்வி பேரவையின் நிர்வாக குழுவின் கூடடம் மாதத்திற்கு ஒரு தடவையும், நிர்வாககுழு மற்றும் ஆலோசனை குழு இடையிலான கூடடம் 3 மாத்திற்கு ஒரு தடவையும், பொது கூடடம் வருடதிற்கு ஒரு தடவையும் நடைபெறவுள்ளன.
பிரிவில் சிறந்த பெறுபெறுகளை பெரும் மாணவர்களை கெளரவிக்க வேண்டும் என்ற முடிவும், பல்கலைகழக மாணவர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளன.