பொது இடங்களில் தடுப்பூசி அட்டைகள் கட்டாயம்

ஜனவரி 01 முதல் கொரனோ தடுப்பூசிகளை பொது இடங்களுக்கு எடுத்து செல்லுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் சுகாதர நடைமுறைகளை பின்பற்றாமையினால் இந்த நடவடிக்கை ஆரபிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி அட்டை அல்லது அதன் பிரதி ஒன்றினை கட்டாயமாக ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டுமென அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பொது நிகழ்வு ஒன்றிலும் இந்த அறிவிப்பினை செய்துள்ளார்.

இந்த அறிவித்தல் மூலம் தடுப்பூசிகளை இதுவரை பெறாதவர்கள் வெளிவரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகளை பெற்றவர்கள் மட்டுமே தடுப்பூசிகளை பெற்றவர்களாக கருதப்படுகிறார்கள்.
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளவர்களுக்கான மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசிகள் இலங்கை பூராகவும் ஏற்றப்பட்டு வருகின்றது.

பொது இடங்களில் தடுப்பூசி அட்டைகள் கட்டாயம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version