பிரதமரின் யோசனையின் பேரில் யொஹானிக்கு பரிசு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைய உலக புகழ் பெற்ற இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு கொழும்பில் காணி ஒன்றை பரிசாக வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

உலகளாவிய இசை அரங்கில் சாதனை படைத்தமைக்காக அவருக்கு இந்த பரிசு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பத்தரமுல்லை ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 9 பேர்ச் காணியை யொஹானிக்கு அரசாங்கத்தின் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது.

இதற்கான முன்மொழிவு விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின்   யோசனையின் பேரில் யொஹானிக்கு பரிசு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version