இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் கொரோனாவால் இறந்தார்

யாழ்ப்பாணம் இணுவிலை சேர்ந்த பெண் ஒருவர் இரட்டை குழந்தைகளை பிரசவைத்திருந்த நிலையில் இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் குறித்த பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துளளனர். இம்மாதம் நான்காம் திகதி கர்பிணியான பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் குழந்தைகள் பிறந்து சுகதேகிகளாக உள்ளதோடு கொரோனா தொற்று ஏற்படவில்லை,.
பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா ஏற்படுவது, கர்ப்பிணி தாய்மார் அதிகம் கொரோனா தொற்றுக்கு உள்ளாவது, இறப்புகள் நிகழ்வதனால் கர்ப்பதரிப்புகளை தள்ளி வைக்குமாறு அண்மையில் வைத்தியர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் கொரோனாவால் இறந்தார்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version