ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லை அமைப்பாளர் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தொகுதி வாரியான அமைப்பாளர்களை நியமிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கமான தகுதி வாரியான அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பிரதான மாவட்ட அமைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. அதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அமைப்பாளராக லக்சயன் முத்துக்குமாரசாமி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிடம் தனக்கான நியமனத்தினை பெற்றுக்கொண்டார்.


இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய இளைஞர் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க,பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன. ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திர பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லை அமைப்பாளர் நியமனம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version