சுகாதார வழிகாட்டுதல்களை மறந்த மக்கள்

நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாக மீறப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் உள்ள சில வணிக வளாகங்கள் நிரம்பி காணப்படும் நிலையில், பொதுப் போக்குவரத்து சேவைகளிலும் பயணிகளை ஆசன இருக்கைகளின் திறனை விட அதிகமாக ஏற்றிச் செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள பெரும்பாலான வணிக நிலையங்களில் பொதுமக்கள அதிக எண்ணிக்கையில் கூடுவதையும், முகக்கவசமின்றி திரிவதையும் அவதானிக்கக் கூடியதாக இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் அல்லது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் நடமாடுவது குறித்து தங்களுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார வழிகாட்டுதல்களை மறந்த மக்கள்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version