கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

பண்டிகைக் காலங்களில் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் உள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், குடியிருப்பாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடமாடும் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதன் மூலமும் மற்றும் ரோந்துகளில் ஈடுபடுவதன் மூலமும் திருடர்கள் மற்றும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு அதிக பொலிஸ் அதிகாரிகளை நியமிக்குமாறு அமைச்சர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version