மீண்டும் இந்தியா பயணமாகவுள்ளார் நிதியமைச்சர்

நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் இந்தியா – குஜராத்தில் நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீன வெளிவிவகார அமைச்சர் வேங் யீ இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்வதன் பின்னர், பஸில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நிதியமைச்சர் மேற்கொள்ளும் இந்தியாவுக்கான இரண்டாவது உத்தியோகப்பூர்வ விஜயம் இது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version