பதுளை மாநகர சபை முதல்வர் பதவி வெற்றிடம்

பதுளை மாநகர சபையின் முதல்வர் பதவி வெற்றிடத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான பதுளை மாநகர சபை முதல்வர் பிரியந்த சமரசிங்க குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக, ஊவா மாகாண ஆளுநர் ஜே.ஏ முஸம்மில் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்படாமை காரணமாக, உள்ளூராட்சி நிறுவனங்களின் விசேட சட்டங்களுக்கு அமைய அவரை பதவி நீக்கம் செய்தள்ளதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பதில் முதல்வர் பதவி, பிரதி நகர முதல்வர் நலிந்த ரங்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பதுளை மாநகர சபை முதல்வர் பதவி வெற்றிடம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version