‘இலங்கைக்கு நீண்ட கால ஒத்துழைப்புகளை வழங்க தயார்’

இலங்கையுடன் இந்தியா எப்போதும் நெருங்கிய நண்பராகவும் அயலவராகவும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இம்மாத முற்பகுதியில் இந்தியா – புதுடெல்லியில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைய, இலங்கைக்கு நீண்டகால மற்றும் மத்திய கால ஒத்துழைப்புகள் கிடைக்கவுள்ளதாக வருட இறுதி விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதனை தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து இலங்கை நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் முதலாவது உத்தியோகப்பூர்வ இந்திய விஜயத்தின் போது உணவு, சுகாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் செலாவணி ஸ்திரத்தன்மை ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

'இலங்கைக்கு நீண்ட கால ஒத்துழைப்புகளை வழங்க தயார்'
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version