வவுனியா, தாண்டிக்குளத்தில் சற்று முன்னர் நடைபெற்ற விபத்தில், ரஜீபன் எனும் முச்சக்கர வண்டி சாரதிஸ்தலத்திலேயே காலமானார்.
கார் ஒன்றும், முச்சக்கர வண்டியும் மோதுண்டு கடும் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இரண்டு வாகனங்களும்கடுமையாக சேதமடைந்துள்ளன.
சம்வத்தில் உயிரிழந்தவர் தோணிக்கல், பொது கிணத்தடியை சேர்ந்தவர் எனவும். இலுப்பையடி தரிப்பிடத்தில், முச்சக்கரவண்டி ஓட்டுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை செய்து வருவதாக வவுனியா பொலிஸ் நிலையத்தினர்தெரிவித்துள்ளனர்.