ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மற்றும் டி20 போட்டிக்கான இலங்கை அணித்தலைவர் தசுன் ஷாணக்கவுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹசான் திலகரத்னவுக்கும் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.