வெளிநாட்டு பணியாளர்களுக்கு ரூ.240 டொலர்கள்?

இலங்கைக்கு அந்நிய செலாவணிகளைப் பெற்றுத்தரும் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாய் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைகளை திரைசேரி மேற்கொள்ள வேண்டும் என்றும், நாடு முகம் கொடுத்துள்ள டொலர் நெருக்கடிக்கு இதுவே சிறந்த தீர்வாக அமையுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் டொலருக்கு இவ்வாறு அதிக பணம் வழங்கப்படுமாயின், மக்கள் நிச்சயமாக சரியான முறையில் பணத்தை அனுப்புவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனை தொடர்ந்து உண்டியல் முறையில் பணம் அனுப்பும் பழக்கமும் விடுப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு பணியாளர்களுக்கு ரூ.240 டொலர்கள்?
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version