ஈஸ்டர் தாக்குதல் – சந்தேக நபர் மரணம்

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று (04/01) அவர் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார், கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

பள்ளி வீதி, கல்முனையைச் சேர்ந்த 42 வயதுடைய சல்லி மொஹமட் கலின் என்பரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.

உயிரிழந்துள்ள சந்தேகநபர் உடல்நலக் குறைவின் காரணமாக, கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கடந்த மாதம் 5ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்ததாக பொரளை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் -   சந்தேக நபர் மரணம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version