பாடசாலைகள் 100% வழமைக்குத் திரும்புகின்றன

எதிர்வரும் திங்கட்கிழமை (10/01) முதல் சகல பாடசாலைகளிலும் தரம் 01 தொடக்கம் 13 வரையான தரங்களுக்கு கல்வி நடவடிக்கைகளை வழமைப் போல முன்னெடுப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கல்வி அமைச்சுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

அனைத்து அரச பாடசாலைகளும், அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி வழங்கப்பட்ட தவணை விடுமுறைக்குப் பிறகு இம்மாதம் 3ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டன.

கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் நாட்டில் பாடசாலைகள் சுமார் 6 மாதங்களாக மூடப்பட்டிருந்தமையால், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பரில் பாடசாலை விடுமுறைகளை வெறும் 10 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.

அதனை தொடர்ந்து 27 மாணவர்களுக்கு மேல் வகுப்பறைகளில் மாணவர்களை வரவழைக்க கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.

இந்நிலையில், சகல கற்றல் நடவடிக்கைகளையும் வழமைப்போன்று முன்னெடுப்பதற்கு கல்வியமைச்சுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.

பாடசாலைகள் 100% வழமைக்குத்  திரும்புகின்றன
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version