எல்லைத் தாண்டிய மீனவர்கள் விடுதலை

எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விள்ககமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் தமிழக மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களை விடுதலை செய்ய மன்னார் நீதிமன்றம் இன்று (05/01) உத்தரவிட்டுள்ளது.

கைதான மீனவர்கள் மீது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தமை, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமை மற்றும் தடை செய்யப்பட்ட தொழில் முறைமையான இழுவை படகை பயன்படுத்தியதை என மூன்று குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

எல்லைத் தாண்டிய மீனவர்கள் விடுதலை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version