விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பொஸ் சீசன் 3 மூலம் இரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லொஸ்லியா மரியநேசன், அதன்முலம் கிடைத்த திரைப்பட வாய்ப்புகளைப் பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக மாறியுள்ளார்.
இவருடைய முதல் படமாக ஃப்ரென்ஷிப் திரைப்படம் அமைந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்தில் பிக் பொஸ் புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மூலமாக இரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை லொஸ்லியா தற்போது மினுமினுக்கும் வெள்ளிநிற உடையில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.