கொழும்பு துறைமுக நகரத்தின் ஒருபகுதி வார இறுதியில் திறக்கப்படும்

கொழும்பு துறைமுக நகரில் பொது மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பொது நடைபாதையின் ஒரு பகுதி இவ்வார இறுதியில் திறக்கப்படவுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சர் வேங்க் ஹியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது துறைமுக நகரின் இந்த பகுதி திறந்து வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது காலிமுகத் திடலிலிருந்து கால் நடையாக செல்லக் கூடிய ஒரு பகுதியாகும்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65 வருட பூர்த்தியை முன்னிட்டு அவரது விஜயம் அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கொழும்பு துறைமுக நகரத்தின் ஒருபகுதி வார இறுதியில் திறக்கப்படும்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version