இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக மின்சார துண்டிப்பு அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனினும் பகல் வேளையில் மின் விநியோக தடையை ஏற்படாது என சபையின் பொதுமுகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று (10/01) முதல் நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று (09/01) அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.