பொகவந்தலாவ – செல்வகந்த பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (09/01) கைது செய்துள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்களிடமிருந் மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.