தேர்தல் பொது கூட்டணி உருவாகிறதா?

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில், அவர்களோடு மேலும் பல கட்சிகள் இணைந்து தேத்தலுக்கான கூட்டணி ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தனது ஊகங்களை வெளியிட்டுள்ளது.

தற்போதைய ஆளும் கட்சியிலுள்ள சில கட்சிகளும், சில அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

யார் பொது வேட்பாளர்கள் போன்ற விடயங்கள் இதுவரை முடிவு செய்யப்படவில்லையெனவும், இவ்வாறான கூட்டணி ஒன்று இந்த வருடத்துக்குள் உருவாக்கப்பட்டு, அதன் வேலைத்திட்டங்களை ஆரம்பித்தாலே எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ள முடியும் என்ற முனைப்போடு இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி யாருடன் கூட்டணி அமைத்தாலும், அதன் பொது வேட்பாளர் சஜித் பிரேமதாசவே என, இன்றைய தினம் அதன் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பொது கூட்டணி உருவாகிறதா?
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version