இன்று மின் வெட்டு இடம்பெறாது – UPDATE

முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு அமைய இன்று மின் வெட்டு இடம்பெறாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

முந்திய செய்தி

இன்றைய தினமும் (12/01) ஒரு சில பகுதிகளில் இரவு வேளையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறினால் பாதிக்கப்பட்ட களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தின் திருத்தப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அதன் மேலதிக செயலாளர் சுகத் தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு, மாலை 5.30 மணியிலிருந்து 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின் வெட்டு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மின் வெட்டு இடம்பெறாது - UPDATE
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version