குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லை வீராங்கனை

சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை சார்பில் போட்டியிட்ட முல்லைத்தீவை சேர்ந்த கணேஷ் இந்துகாதேவி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பாகிஸ்தான் – லாகூரில் நேற்று (18/01) நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டை போட்டியின் 25 வயதுக்கு உட்ப்பட்ட 50 – 55 கிலோ எடைப் பிரிவின் கீழ் கணேஷ் இந்துகாதேவி போட்டியிட்டார்.

தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்ட முறிப்பு புதியநகர் கிராமத்தில் வசிக்கும் இவர், சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்ந்த்துள்ளார்.

குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லை வீராங்கனை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version