மத்திய வங்கியின் உதவியை நாடும் வர்த்தகத்துறை

டொலர் பற்றாக்குறை காரணமாக துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கியுள்ள 800 கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த கொள்கலன்களின் விடயதானங்கள் அடங்கிய ஆவணங்களை மத்திய வங்கிக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், நாளை (20/01) முதல் குறித்த கொள்கலன்கள் விடுவிக்கப்படும் எனவும் அவற்றிலுள்ள அரிசி, சீனி மற்றும் பருப்பு ஆகிய அத்தியாவசிய பொருட்கள் இதன்மூலம் சந்தைக்கு விடுவிக்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது சுட்டிக்காட்டினார்.

மத்திய வங்கியின் உதவியை நாடும் வர்த்தகத்துறை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version