‘பிகில்’ அம்ரிதா ஐயர்

லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில துணை கதாப்பாத்திரங்களில் தோன்றி தமிழ் திரையுலகுக்குள் பிரவேசித்து பிகில் திரைப்படம் மூலம் பிரபலமான அம்ரிதா ஐயர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அமிர்தா படைவீரன் மூலம் முன்னணி நடிகையாக அறிமுகமான இவர், காளி (2018) என்ற திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு இணையாக கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

இதன் பின்னர் அட்லீயின் பிகில் திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவியாக தென்றல் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பலரும் அறிய இவர் புகழ் பெற்றார்.

மேலும் பிக் பொஸ் புகழ் கவினுடன் இணைந்து நடித்து நல்ல வரவேற்பை பெற்ற திகில் திரைப்படமான லிஃப்ட் திரைப்படத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான பாராட்டுகளை பெற்றுக் கொண்டார்.

'பிகில்' அம்ரிதா ஐயர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version