தேநீருக்கான விலை சதமடித்துள்ளது.பால் தேநீர் ஒன்றின் விற்பனை விலை 100 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் இன்று இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் “தொடர்ச்சியான விலையேற்றங்களும், பால்மாவின் விலை அதிகரிப்பும் தேநீர் விலையேற்றத்துக்கான காரணம்” என தெரிவித்துள்ளார்.